Powered by Blogger.

Wednesday 10 April 2019

Who is Tami Rockers Admin, How Much Money Tami Rockers Make Explained in Tamil.

0 comments

தமிழ் படங்கள் ரிலீசான சில மணி நேரத்திலேயே படத்தை சட்டவிரோதமாக (Illegal Ways) தங்களது வெப்சைட்டில் ( In TamilRockers ) வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் தற்போது தமிழ் திரை உலகிற்கு பெரும் சவாலாக உள்ளது.

Tamil Cinema Producer Council அதன் தற்போதைய தலைவர் VISHAL எவ்வளவு முயன்றும் தமிழ் Tamilrockers இணையதளத்தை தடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கான பணம் அரசியல் தொடர்பு என்று பிரம்மாண்ட பின்னணி கொண்டவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

Who is Tami Rockers Admin, How Much Money Tami Rockers Make Explained in Tamil?

Tamilnadu Cyber Crime Police பிரிவு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க போராடி வருகிறது, ஆனால் இதுவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.

சுமார் 8 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் தற்போதைய ஆண்டு வருமானம் மட்டும் 210 கோடிகள்.

இவ்வளவும் தொடங்கியது கோயமுத்தூரில் உள்ள ஒரு சின்ன CD கடையில் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.  கோயம்புத்தூர் சரவணம்பட்டி சேர்ந்த பாஸ்கர் குமார் எனும் சிறுவன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்து மருமடியும் எழுதியும் தோல்வியை தழுவுகிறான்.

விரக்தியில் இருந்த பாஸ்கர் நண்பர்களுடன் பொழுது போக்கி நாட்களைக் கழித்தார், அந்த ஏரியாவில் உள்ள பஜார் பிரபலமானது சின்ன சின்ன கடைகளாக வரிசையாக இருக்கும்.

அங்கு எலக்ட்ரானிக் பொருட்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான சாப்ட்வேர்களில் திருட்டு VCD மலிவாக கிடைக்கும், அவனது நண்பர்களும் பெரும்பாலும் தங்களது நேரத்தை அந்த வகையிலேயே கழித்தனர்.

அப்போது அங்கு பரபரப்பாக நடக்கும் CD வியாபாரத்தை கண்ட பாஸ்கருக்கு தானும் சிறியதாக ஒரு சிறு கடையை ஆரம்பிக்கலாம் என்ற யோசனை தோன்ற வீடியோ சென்ட் cities எனும் சிறிய கடையை தொடங்கினான்.

ஆங்கில பட cd என்று விற்கத் தொடங்கினான் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பாஸ்கருக்கு வியாபாரம் அமோகமாக நடக்க ஆரம்பித்தது. காரணம் என்று அந்த ஏரியாவில் பிரபலமாகியது விதவிதமான cd கள் கொள்முதல் செய்வதற்காக வாராவாரம் சென்னை மெஜஸ்டிக் center க்கு வர ஆரம்பித்தார்.

பாஸ்கர் அங்கு அவனுக்கு டேனியல் ராஜ் எனும் நண்பன் அறிமுகமானார் ஒரு படம் எடுத்து முடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அந்த பட தயாரிப்பாளர் டிஸ்ட்ரிபியூட்டர்கள் அனைவருக்கும் படம் ரிலீசாவதற்கு முதல் நாள் இரவு படத்தின் முதல் பாதியை தனியாக திரையிட்டு காட்டுவார்

படம் பிடித்திருந்தால் தேவைப்படும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்கி தியேட்டர்களுக்கு விநியோகிப்பார்கள். இதில் டிஸ்ட்ரிபியூட்டர்கலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பண பரிவர்த்தனை பேச்சுவார்த்தை போன்ற விஷயங்களுக்காக புரோக்கர்கள் பலர் செயல்படுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் டேனியல் ராஜு தனது பழைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு தயாரிப்பாளரையும் டிஸ்ட்ரிபியூட்டர் களையும் பலமுறை சந்தித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி டீலிங்கை ஒழித்து படம் ரிலீசாக உதவுவார்.

அதற்கு அவருக்கு கமிஷனாக ஒரு சின்ன தொகை கிடைக்கும் இந்த சொற்ப வருமானத்தை வைத்து கொண்டு முன்னேற முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்த டேனியல் ராஜுவுக்கு அப்போதுதான் piracy business குறித்து தெரியவந்தது.

தமிழ் பட திருட்டு விசிடிக்கள் முதல் வெளிவந்து கொண்டிருந்த நேரம் அது பணம் கொட்டிக் கொண்டிருந்த அந்த சட்டவிரோத தொழில்களில் டேனியல் ராஜுவும் இறங்க ஆரம்பித்தார்.  சின்ன சின்ன இன்டர்நெட் சென்டர் களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு ஒரு ஒரிஜினல் cd யை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் பூட்டிய அரைக்குள் இன்டர்நெட் சென்டரில் டூப்ளிகேட் cd களை காப்பி செய்ய ஆரம்பித்தார்.

ஆனால் அவை யாவும் புதிதாக ரிலீசான படங்கள் இல்லை ரிலீஸ் ஆகி சில வாரங்களோ அல்லது சில மாதங்களே ஆன படங்கள்.

அவை சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்தில் இறக்குமதியான எம்டி செடிகளை ஆயிரக்கணக்கில் வாங்கி அதில் படங்களை காப்பி செய்து தமிழகமெங்கும் உள்ள சிடி கடைகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தார்.
 இங்குதான் டேனியல் ராஜுவுக்கு அவனது பழைய நண்பன் கோயம்புத்தூர் cd கடை பாஸ்கர் உதவுகிறார்.

இருவரும் சேர்ந்து சட்டவிரோத தொழில் அமோகமாக செய்து வந்தனர் பணம் கொட்டியது இவர்களது லாபத்திற்கு ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம்.  தனுஷ் நடித்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய படம் காதல் கொண்டேன் வெற்றிகரமாக ஓடியது, படம் வெளிவந்து கழித்து அந்த பட தயாரிப்பாளர் படத்தின் ஒரிஜினல் cd யை விற்பனைக்கு வெளியிட்டார். ஒரு cd யின் விலை 450 ரூபாய் சுமார் 750 cd கள் விற்பனையாகியது.

அதன் மூலம் பட தயாரிப்பாளருக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் லாபம் வந்தது.

ஒரே ஒரு ஒரிஜினல் சிடி 450 ரூபாய்க்கு வாங்கி சட்டவிரோதமாக பலகைகள் போட்டு திருட்டு விசிடி ஆக விற்பனைக்கு கொண்டு வந்தார் டேனியல் ராஜ். ஒரு திருட்டு விசிடி ன் விலை 70 ரூபாய் மொத்தம் 62 ஆயிரம் செடிகள் விற்பனை ஆனது, அதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த தொகை 43 லட்சம் ரூபாய் ஆனால் முறையாக வெளியிட்ட படத் தயாரிப்பாளருக்கு சிடி விற்பனை மூலம் கிடைத்தது வெரும் மூன்றரை இலட்சம் ரூபாய்.

இதன் மூலம் திருட்டு விசிடி சந்தையில் லாபத்தை நீங்கள் உணரலாம். இப்படி ரிலீசாகி சில மாதங்கள் கடந்த படங்களை திருட்டு விசிடி விற்பனை செய்து வந்த டேனியல் ராஜுவுக்கு ரிலீஸான படத்தை உடனே திருப்தியாக விட்டால் இன்னும் கொள்ளை லாபம் கிடைக்குமே என்கிற விபரீத யோசனை ஏற்பட்டது.

முதல் படமாக அவர்கள் தேர்ந்தெடுத்தது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி, அதற்காக 70 கம்ப்யூட்டர்களை வாடகைக்கு எடுத்தனர் ஆந்திர மாநிலம் சித்தூரில் அவர்களுக்கு தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்ட சிவாஜி பட ப்ரின்ட் கிடைத்தது, அதை ஒரு லட்சம் கொடுத்து வாங்கிய டேணியல் ராஜுவும் பாஸ்கரும் தமிழ்நாட்டில் சிவாஜி படம் ஓடும் நல்ல தரமான சினிமா தியேட்டரில் அந்த படத்தின் ஆடியோவை மட்டும் ரெக்கார்ட் செய்தனர்.

சிவாஜி தெலுங்கு டப்பிங் படத்தில் பிரிண்டில் உள்ள தெலுங்கு ஆடியோவை நீக்கிவிட்டு தமிழக தியேட்டரில் திருட்டுத்தனமாக ரெக்கார்ட் செய்யப்பட்ட தமிழ் ஆடியோவை சேர்த்தனர், அவ்வளவுதான் பல கோடியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான சிவாஜி படம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் இவர்களிடம் கிடைத்துவிட்டது.

சூட்டோடு சூடாக இரவு பகலாக 70 கம்ப்யூட்டர்களை கொண்டு ஆயிரக்கணக்கான பிரிண்ட் போடப்பட்டு, தமிழகமெங்கும் உள்ள சிடி கடைகளுக்கு விற்பனை செய்தனர் கொள்ளை லாபம் கிடைத்தது.

இந்நிலையில் சிவாஜி படத்தின் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் போலீஸ் கமிஷனரிடம் திருட்டு விசிடி தொடர்பாக புகார் செய்யவே தமிழக காவல்துறையின் anti-piracy செல் தமிழகமெங்கும் அதிரடி ரெய்டு நடத்தியது.

சென்னையில் மட்டும் 350 சிடி கடைகள் மூடப்பட்டன பல சிடிகளை உரிமையாளர்கள் arrest செய்யப்பட்டனர். டேனியல் ராஜ் பாஸ்கரும் தலைமறைவாகினர் கொள்ளை லாபம் பார்த்து விட்டனர்.

Starting Of TamilRockers Website

ருசிகண்ட பூனை சும்மாயிருக்குமா, அடுத்து இந்த சட்டவிரோத தொழிலை எப்படி நடத்துவது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தனர் அப்போது டேனியல் ராஜு தற்செயலாக யூடியூபில் வீடியோக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது யூடியூபில் யாரோ ஒருவர் அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆங்கில படத்தில் 10 நிமிட வீடியோவை அப்லோட் செய்து டிஸ்கஷனில் அந்த படத்தை முழுமையாக டவுன்லோட் செய்வதற்கான லீக்கை கொடுத்திருந்தார், இதைப்பார்த்த டேனியல் ராஜுவின் மூளையில் மின்னலடித்தது,

சிடியாக அடித்து ஆயிரக்கணக்கான காப்பி எடுத்து அதை தமிழகம் முழுவதும் விநியோகிப்பதால் தானே போலீஸ் நம்மை நெருங்க முடிகிறது, ஏன் புது படத்தை இன்டர்நெட்டில் அப்லோட் செய்ய கூடாது என்கிற யோசனை வந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ளவர்கள் படம் சென்றடையும் எத்தனை பேர் டவுன்லோட் செய்கிறார்களோ அவ்வளவு வருமானம் இன்டர்நெட்டில் கிடைக்கும் என்கிற எண்ணமும் எழுந்தது.

இதை அடுத்து ஒரு சுபமுகூர்த்த சுப நாளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பத்துக்குப் பத்து கொண்ட ஒரு சிறிய அறையில் டேனியல் ராஜு பாஸ்கர் கோவிந்தா சின்னசாமி மற்றும் பாலு ஆகிய நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் மூவிஸ் திரண்டு இணையதளம்.

பின் மூன்றே வாரத்தில் அது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் என்று பெயர் மாற்றப்பட்டது பல கோடிகளை கொட்டும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு நாம் நினைத்து பார்க்க முடியாத பல வழிகளில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆன உடனேயே ரிலீஸாவதற்கு முன்பே கூட கிடைக்கிறது.

 அது என்னென்ன வழிகள், Tamirockers Website பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் யார் யார், அவர்களின் பிரம்மிக்க வைக்கும் டெக்னிக்கல் டீம், இந்த சட்டவிரோத தொழில் குறித்து அவர்கள் முன்வைக்கும் நியாயங்கள் என்னென்ன என்பது அமானுஷ்யம் தான்.

No comments:

Post a Comment